நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கில் மும்பை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல் மந்திரிக்கு பாரதிய ஜனதா எம்எல்ஏ கடிதம் எழுதி இருக்கிறார்.
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை காவல்துறையினர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கில் 50 நாட்களை கடந்தும் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று பாரதிய ஜனதா எம்எல்ஏ அப்துல் பாத்கல்கர் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த வழக்கு தொடர்பான விவகாரத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு எம்எல்ஏ கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், “நடிகர் சுஷாந்த் சிங் மற்றும் அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கை காவல்துறையினர் விசாரணை செய்யும் அணுகுமுறை மிகவும் தவறாக இருக்கின்றது. மேலும் வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இரு வழக்கையும் விசாரணை செய்யும் காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவரை கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.