Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விதார்த்தின் ‘ஆற்றல்’… படத்தில் கார் நடித்துள்ளதா?…!!!

நடிகர் விதார்த் நடித்துள்ள ‘ஆற்றல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கார் நடித்துள்ளது.

தமிழ் திரையுலகில் மைனா படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் வித்தார்த் தற்போது ‘ஆற்றல்’ என்ற படத்தில் நடித்துள்ளார் . செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே எல் கண்ணன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரிதாவும் ,வில்லனாக வம்சி கிருஷ்ணாவும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சார்லி, வையாபுரி, விக்கி ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வித்தார்த்துடன் இணைந்து கார் நடித்துள்ளதாம்.

Vidharth Wiki, Biography, Age, Movies, Family, Images - News Bugz

இதுகுறித்து இயக்குநர் கே எல் கண்ணன் ‌’கார் எப்படி ஒரு மனிதனுக்கு மனிதனை போல உதவ முடியும், டெக்னாலஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் என்பதே இந்தப் படம். ஒரு காரை கதாபாத்திரமாக வடிவமைத்து எடுத்துள்ள இந்த படம் அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும் . படம் பார்ப்பவர்களுக்கு இது புதுமையாக இருக்கும் . கார் எப்படி நடித்திருக்க முடியும் ? என்பவர்களுக்கு இந்த படத்தை பார்க்கும் பொழுது தான் புரியும்’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |