நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ராசி கண்ணா ,பார்த்திபன் ,மஞ்சிமா மோகன், அதிதி ராவ் ,சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் .
Here's the much-awaited Makkal Selvan@VijaySethuOffl 's #TughlaqDarbarTeaser https://t.co/HVWbqIWpoZ@7screenstudio @Lalit_SevenScr @DDeenadayaln @govind_vasantha @manojdft @RaashiKhanna @mohan_manjima @rparthiepan @samyuktha_shan @thinkmusicindia
— Sun TV (@SunTV) January 11, 2021
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானது . நேற்று சன் டிவியின் யூடியூப் சேனலில் ஜனவரி 11ஆம் தேதி அதாவது இன்று துக்ளக் தர்பார் படத்தின் டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது . ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி -பார்த்திபன் காம்போ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த படத்திலும் இவர்கள் இணைந்து நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.