நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக கலக்கி வந்த விஜய் ஆண்டனி தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’ . இந்தப் படத்தில் ஆத்மீகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ‘கேஜிஎப்’ பட நடிகர் ராமச்சந்திர ராஜு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
Hi friends, listen to this breezy first single track "Avan Paathu sirikala" from #KodiyilOruvan. 😊🙏🏻
A @nivaskprasanna musical 🎶
Director – @akananda@im_aathmika @nsuthay @chendurfilm @FvInfiniti @saregamasouth @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/MyI8n9XKsW
— vijayantony (@vijayantony) March 5, 2021
இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘அவன் பாத்து சிரிக்கல’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது . மேலும் கோடியில் ஒருவன் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .