நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியை தவறாக பேசி வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி ஆகியோரை பற்றி தவறான கருத்துகளை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பெரும்பாலானோர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரத்திலுள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் மீராமிதுன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசனிடம் மனு கொடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக நடிகை ஜோதிகா பற்றி மீராமிதுன் தவறாக பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.