நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் டீசர் நாளை சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியாக உள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற ஜனவரி 13ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதில் இவர் நடித்து முடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் டிவியில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானது .
மக்கள் செல்வன் @VijaySethuOffl நடித்த #TughlaqDarbarTeaser நாளை 12.30pm உங்கள் சன் டிவி YouTube சேனலில்https://t.co/ZmWeEqK8yy@7screenstudio @Lalit_SevenScr @DDeenadayaln @govind_vasantha @manojdft @RaashiKhanna @mohan_manjima @rparthiepan @samyuktha_shan @thinkmusicindia pic.twitter.com/lD0WEryFQQ
— Sun TV (@SunTV) January 10, 2021
இந்நிலையில் சன் டிவியின் யூடியூப் சேனலில் நாளை மதியம் 12: 30 மணிக்கு ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் ரிலீஸாக இருப்பதாக சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது . இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ராசி கண்ணா, பார்த்திபன், மஞ்சிமா மோகன் ,அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் .