Categories
சினிமா தமிழ் சினிமா

‘நடிகர் விஜய் சேதுபதியுடன் லஞ்ச் சாப்பிட்டேன்’… பிரபல நடிகை ட்வீட்…!!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் லஞ்ச் சாப்பிட்டதாக பிரபல நடிகை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி தளபதி விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தை பார்த்த நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ நீண்ட இடைவெளிக்குப்பின் திரையரங்கில் படம் பார்ப்பது பெருமையாக இருப்பதாகவும் அதிலும் விஜய் படத்தை பார்க்கும் போது கிடைக்கும் பெருமிதத்தை விட வேறு என்ன வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய விஜய் சேதுபதியுடன் லஞ்ச் சாப்பிட்டதாக நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் ‘விஜய் சேதுபதியுடன் உணவைப் பகிர்ந்து சாப்பிட்டது ஒரு சாதாரண நாளை ஸ்பெஷல் நாளாக மாற்றிவிட்டது’ என பதிவிட்டுள்ளார் .மேலும் விஜய் சேதுபதியுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |