நடிகர் விஜய்யுடன் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், வால் ,ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் பிரியங்கா . கலகலப்பான பேச்சு மற்றும் நகைச்சுவையுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்காவுக்கு ரசிகர்கள் ஏராளம் . தற்போது இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தொகுப்பாளினி பிரியங்கா நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது . மேலும் பிரியங்கா நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்பதை அவரே பலமுறை கூறியுள்ளார் .