Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’… இணையத்தை தெரிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணாக்காரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் பிரபு ‘கும்கி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் . இதைத் தொடர்ந்து இவர் இது என்ன மாயம், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி, சத்ரியன், வெள்ளைக்கார துரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணாக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது . இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Categories

Tech |