நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகவுள்ள ‘மோகன்தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர் , காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் .
Pictures from the pooja of #Mohandas🔨. All the main members of the team in one place. Shoot from today!@TheVishnuVishal @aishu_dil @Indrajith_S @im_the_TWIST @24frps @SundaramurthyKS @editorkripa @anbariv @thanga18 @shravanthis111 @proyuvraaj @divomovies pic.twitter.com/M5j4Q9TXVh
— Vishnu Vishal Studioz (@VVStudioz) March 5, 2021
மேலும் இந்த படத்தில் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது . இந்நிலையில் மோகன்தாஸ் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பூஜையில் நடிகர் விஷ்ணு விஷால் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் . பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .