Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை எமிஜாக்சன் கண்ணீர் வடித்தார்…எதற்கு தெரியுமா.?

நடிகை எமி ஜாக்சன் குதிரைக்காக கண்ணீர் வடித்தார் என இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.

எமி ஜாக்சன் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இங்கிலாந்தின் பிரபல மாடலாக இருந்தவர் இவர். ரஜினி, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதன்பின் தனது குடும்ப வாழ்க்கையில் பிஸியானதால் நடிப்பதற்கு இடைவெளி கொடுத்திருந்தார். மீண்டும் விரைவில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் விஜய் மதராசபட்டினம் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சில சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

 

அவர் ‘இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்க்கை முறைகளை வித்தியாசமாக இருந்தது என எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். ரோட்டில் மாடு செல்வதை பார்த்தேன் என்று அவர் ஆச்சரியபட்டதாக விஜய் கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பின்போது குதிரை வெயிலில் இருந்ததைப் பார்த்து எமி ஜாக்சன் அழுததாகவும் கூறியுள்ளார். அதன்பின் அக்குதிரையை நிழலான இடத்திற்கு கொண்டு சென்று உணவு கொடுத்த பின்புதான் எமி ஜாக்சன் அமைதியானார்.’ எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |