Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா பாதுகாப்பு.. பாரம்பரிய பழக்கம் கை கொடுக்கிறது – ஜெனிபர்..!!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீட்டில் இருக்கும் பட்சத்தில் பாரம்பரிய பழக்கம் எனக்கு கை கொடுக்கிறது என நடிகை ஜெனிபர் கூறினார்.

வெள்ளித்திரையில் நடித்து முடித்து சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஜெனிபர் கூறுவதாவது,  வீட்டிற்குள் வேலை செய்யும் பழக்கம் வழக்கமானது தான். ஆனால் தற்போது குடும்பத்தினரோடு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே இருக்கும் இந்த அனுபவமானது புதிதாகும்.  இருந்தும் மருந்து என்ற ஒன்று அறியப்படாத நிலையில் பரவும் இந்த கொடிய வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காக வீட்டிற்குள்ளேயே இருப்பது அப்படி ஒன்றும் கடினம் இல்லை.

ஆனாலும் நான் எப்பொழுதும் வெளியே சென்று வரும் போது கை, காலை கழுவிவிட்டு வீட்டுக்குள்ளே வருவது, வெளியில் இருந்து கொண்டு வரும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் சுத்தம் செய்து வீட்டுக்குள் எடுப்பது, போன்ற பழக்கங்களை நான் என் கணவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

அதனால் தினமும் செய்யும் வழக்கமானது இந்த பழக்கம். ஆகவே எனக்கு புதிதாக விழிப்புணர்வு எதுவும் தேவையில்லை, இருந்தாலும் மற்ற நேரங்களில் பல குடும்பங்கள் சரியான புரிதல் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் இப்பொழுது அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து பொழுதை கழிப்பார்கள், அப்பொழுது அனைவரிடமும் கண்டிப்பாக ஒரு புரிதல் ஏற்படும், எனவும் அவர் கூறினார்.

 

 

Categories

Tech |