நடிகர் விஜய் ரசிகர்கள் அவரைப் பற்றி அவதூறாக பேசியதற்கு நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்கவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தளபதி விஜயின் ரசிகர்கள் விடுத்துள்ள அறிக்கையில்” விஜய் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான நண்பர்களே.. நமது உயிரினும் மேலான விஜய் பற்றியும், உயிர் அண்ணியாரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் துணை நடிகை மற்றும் மாடல் என சொல்லப்படும் மீரா மிதுன் கீழ்த்தனமாக பதிவு செய்துள்ளார். அவரை வன்மையாக கண்டிப்பதுடன் புதுக்கோட்டை ரசிகர்கள் சார்பில் அவர் மீது நஷ்ட வழக்கு தொடர உள்ளோம். தொலைக்காட்சி மூலமாகவும் பத்திரிக்கை மூலமாகவோ அல்லது சமூக வலைதளம் மூலமாக மீரா மிதுன் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என விஜய் ரசிகர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மீரா மிதுன் நடிகர் விஜய் பற்றியும் அவரது மனைவி பற்றியும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.” விஜய் பற்றியும் அவரது குடும்பத்தினரை பற்றியும் பேசுவதற்கு மீரா மிதுன் உனக்கு தகுதி இல்லை. இதுபோன்று மீண்டும் அவர் அவதூறாக பேசினால் கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என விஜய் ரசிகர்கள் எச்சரித்துள்ளனர். மீரா மிதுன் மீது ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் வழக்கு தொடர விஜய் ரசிகர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.