இனி நடிகை பூஜா நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்குமே ஃபிளாபாகதான் போகிறது நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படம் இவருக்கு சரியாக போகவில்லை. இதனால் ரசிகர்கள் அவரை ராசி இல்லாத நடிகை என விமர்சித்து வந்தனர்.
இதையடுத்து இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதற்கிடையில் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் மார்ச் மாதம் ரிலீஸாகி தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட்டில் ஏப்ரல் 13-ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே. ஆனால் பீஸ்ட் திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வெற்றியைத் தரவில்லை. மேலும் இப்படத்தைப் பார்த்தவர்கள் பூஜாவின் கதாபாத்திரம் சொல்லும் அளவுக்கு இல்லை என்றும் அவரைப் பற்றி பேசவில்லை என்று இணையதளங்களில் அவரை கேலி செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஏப்ரல் 29 ஆம் தேதி பூஜா நடித்து ரிலீஸான ஆச்சார்யா படமும் படுதோல்வி அடைந்துவிட்டது. இந்த நிலையில் இணையதளங்களில் நெட்டிசன்கள் பூஜா ஹெக்டே இரண்டு மாதங்களில் தொடர்ந்து 3-ஃபிளாப் படங்களை கொடுத்து விட்டார். எனவே இனி இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே இப்படித்தான் ஆக போகிறது. இது மட்டுமின்றி பூஜாவிற்கு பழைய ராசி மீண்டும் திரும்பிவிட்டது என்று கேலி செய்து வருகின்றனர்.