ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். இவர் தற்போது பாலிவுட் பக்கம் நடித்து வருகிரார் . அந்த வகையில் பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் ‘மிஷன் மஜ்னு’ படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ‘குட் பை’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ‘குட் பை’ படத்தின் படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சன் உடன் ராஷ்மிகா எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து ரன்பீர் கபூர் நடிப்பில் இயக்குனர் அர்ஜுன் ரெட்டி மற்றும் சந்திப்பு ரெட்டி இயக்கத்தில் அனிமல் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.