தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி. நடிகர் ஆதி தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஈரம், ஆடுபுலி, அரவான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் நடிகை நிக்கி கல்ராணியும் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமாகி கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகவராயினும் நாகாக்க போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளின் படங்களிளும் நடித்துள்ளார்.
இதற்கிடையில் தமிழில் நிக்கி கல்ராணி, ஆதி இருவரும் இணைந்து யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. இருப்பினும் இருவரும் இதுகுறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது நேற்று முன்தினம் இருபெரும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.