Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பபோ சூர்யா இல்லையா….? கே.ஜி.எப் நிறுவனத்துடன் இணையும் பிரபல நடிகர்…. வெளியான மாஸ் தகவல்….!!!!

அஜித்தின்  புதிய திரைப்படத்தை  இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் வசூல் சாதனையும் நல்ல வரவேற்பையும் பெற்ற “கே.ஜி.எஃப்” படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குவதாக சமீபத்தில்  அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து சூர்யா இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அஜித்தின் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் அஜித் இந்த இரு படங்களை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  நடிக்க உள்ளதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |