Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யா மீண்டும் வராராம்… உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருமாறு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா ,சாயிஷா, கருணாகரன், சதீஷ்,மற்றும்  மகிழ்திருமேனி சாக்ஷி அகர்வால் போன்ற முன்னணி கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “டெடி”. இந்தத் திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பின்னர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை ‘,விஷாலுடன் ‘எனிமி’ போன்ற திரைப்படங்களில் ஆர்யா நடித்துள்ளார். இதனையடுத்து பிரபல இயக்குனரான நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிப்பதாக கூறியுள்ளார்.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தை  தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் மூலம் பெயர் பெற்றவர் நலன் குமாரசாமி. இவர் முதல் படமான ‘சூது கவ்வும்’ படத்தை விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கியுள்ளார். இந்தப் படம் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. பின்னர் சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தையும் இயக்கினார்.

பின்னர் சமீபத்தில் வெளியான ஆந்தாலஜியில்  விஜய் சேதுபதி அதிதி பாலன் நடித்த ‘குட்டி ஸ்டோரி’ என்ற கதையை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் பாராட்டை பெற்றது. மேலும் 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான நலன் குமாரசாமி கடந்த 8 ஆண்டுகளில் இரண்டு திரைப்படங்களை மட்டுமே இயக்கி உள்ளதாகவும் இரண்டு ஆந்தாலஜியில் இரு படங்களில் கதைகளிலும் சூப்பர் டீலக்ஸ் மாயவன் போன்ற படங்களில் ஸ்கிரிப்டில் பணியாற்றி உள்ளார். ஆர்யாவும் நலன் குமாரசாமியும் இணைய இருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது

Categories

Tech |