Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் வாய்ப்பு…. இளம்பெண் வாழ்க்கையை சீரழித்த பிரபல நடிகர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பிரபல மலையாள நடிகர் விஜய் பாபு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் சிக்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாற்று எழுந்துள்ளது.

மலையாளத்தில் ஃப்ரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஹோம் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் விஜய் பாபு. மேலும் இவர்பல பிரபலமான படங்களை தயாரித்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர்  இவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண் ஒருவரை  எர்ணாகுளத்தில் உள்ள தனது குடியிருப்பில் வைத்து விஜய்பாபு பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் காவல்துறையினர் விஜய் பாபு மீது  பாலியல் பலாத்காரம் மற்றும் உடல் உபாதை விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றன.  இந்த வழக்கு தொடர்பான தகவல் எதுவும் காவல்துறையினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் திரைத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |