Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நடைபெற்ற மாட்டுச்சந்தை” இந்த வாரமும் வரல…. வியாபாரிகள் செய்த செயல்….!!

மாட்டுச்சந்தையில் 400 மாடுகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்பட்டது. இதில் 250 பசுமாடுகள், 150 எருமை மாடுகள் என மொத்தம் 400 மாடுகள் விற்பனைக்கு வந்தது. இவற்றில் பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.

இதனையடுத்து எருமை மாடு ஒன்று 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வேனில் ஏற்றி சென்றனர். இதற்கிடையில் வழக்கம்போல் இந்த வாரமும் வெளிமாநில வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |