கொங்கணாபுரத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குறைவாக காணப்பட்டனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரத்தில் செயல்பட்டுவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குறைவாக காணப்பட்டனர்.
அப்போது சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு 8 ஆயிரத்து 600 ரூபாய் முதல் 10 ஆயிரத்து 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் பீடி ரகப் பருத்தி குவிண்டாலுக்கு 7 ஆயிரத்து 450 ரூபாய் முதல் 8 ஆயிரத்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. எனவே மொத்தமாக ஆயிரத்து 1,200 மூட்டைகள் பருத்தி 26 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.