பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ 1,575 ரூபாய்க்கு ஏலம் போனது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கரட்டூர் சாலையில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி வழக்கம் போல் நடைபெற்ற பூக்கள் ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் வந்திருந்தனர். இவர்கள் 2 1/2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
அப்போது ஏலத்தில் மல்லிகை பூ கிலோ 1,575 ரூபாய், முல்லை 660 ரூபாய், காக்கடா 825 ரூபாய், செண்டுமல்லி 60 ரூபாய், பட்டுப்பூ 73 ரூபாய், ஜாதிமல்லி 500 ரூபாய், கனகாம்பரம் 465 ரூபாய், சம்பங்கி 15 ரூபாய், அரளி 280 ரூபாய், துளசி 30 ரூபாய் மற்றும் செவ்வந்தி 100 ரூபாய்க்கும் ஏலம் போனது.