Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறப்பு… அமைச்சர்கள் ஒப்புதல்…!!!

ஜெர்மனியின் 16 மாகாணங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு கல்வி அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அப்போது உலகம் முழுவதிலும் உள்ள பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு  கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி.ஜெர்மனியில் 16 மாகாணத்தில் உள்ள பள்ளிகளை திறக்க அந்நாட்டு கல்வி அமைச்சர்brittaernst கூறியுள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கப்படாததால் அதற்கான விலை மிகப் பெரியது என்றும், அதனால்  அனைத்து மாணவர்களும் மார்ச் மாதம் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறினார் .

அதுமட்டுமின்றி  உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால்  அதைப் பற்றி கவலை வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் தங்கள் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதனால் கல்வி ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |