இந்தியாவில் இன்று முதல் அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது . இதுவரை 1.43கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பொது மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். மேலும் இரண்டாம் கட்ட தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் கொரோனாதடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் . தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே தங்களது பெயர்களை மருத்துவமனைகள் மற்றும் பொது சேவை மையங்கள்,கோவிட்19 போன்ற செயலில் பதிவு செய்துகொள்ளலாம். இதில் பெயர் மற்றும் முகவரி ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் அதற்கான மருத்துவ சான்றிதழ்களை, பதிவேற்றம் செய்ய வேண்டும். இவர்கள் அரசு மையங்களுக்கு சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும் முதற்கட்ட தடுப்பூசித் திட்டத்தில் சுகாதார பணியாளர்கள் போன்றவர்களின் தரவுகளை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டது. அதனால் இம்முறை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மூத்த குடிமக்களை உத்தரவுகளும் அரசாங்கத்திடம் உள்ளன என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் விருப்பமுள்ள மக்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதற்க்கு முன்பதிவு செய்யும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது.