Categories
உலக செய்திகள்

நாடு விட்டு நாடு சென்ற 200 அகதிகள் …. மீதமுள்ளவர்களின் நிலை என்ன…? பிரபல நாட்டில் நடந்த சோக சம்பவம் …!!!

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .

ஏமனில் பல ஆண்டுகளாகவே ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ,அரசுப்படையினருக்கும் இடையே  உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் பலரும் வாழ்வாதாரத்தை தேடி ஓமன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இதேபோல் கென்யா மற்றும் சோமாலியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் மக்கள் வாழ்வாதாரத்தை தேடி சவுதி அரேபியா,  ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர். இவ்வாறு மக்கள் சட்டவிரோதமாக நாடுகளுக்குள் நுழைய முயற்சிக்கும்போது ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக கடல்வழிப் பயணத்தை மேற்கொள்ளும்போது படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்குள் ஆப்பிரிக்காவை சேர்ந்த சுமார் 200 அகதிகள் சட்டவிரோதமாக படகு மூலம் அரபிக்கடலில் பயணம் செய்துள்ளனர். இந்த படகு நேற்று முன்தினம்  டிஸ்புடி கடற்பகுதியில் அகதிகளுடன் பயணித்து  கொண்டிருக்கும் போது  எதிர்பாராதவிதமாக  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 200 அகதிகளும் கடலில் மூழ்கினர். அப்போது ஏமன் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்  படகு விபத்துக்குள்ளானதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . இந்த விபத்தில் 25 பேரின் உடல்கள் கடலில் மிதந்து கொண்டிருந்தது.  இந்த  உடல்களை மீனவர்கள் மீட்டுள்ளனர் . இந்த விபத்து  குறித்து மீனவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்து  கடலில் மூழ்கி உயிரிழந்த மீதமுள்ள உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

Categories

Tech |