ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததற்கு ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே தான். இந்த சம்பவம் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டுக்கு நாடு கடத்துவது முறையாக இருக்காது என ஜெர்மனி கருதுகின்றது. இது குறித்து ஜெர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser கூறியதாவது “இப்போது உள்ள சூழலில் ஈரானுக்கு யாரையும் நாடு கடத்த வேண்டாம். ஹிஜாப் அணியாததற்கு ஈரான் நாட்டில் ஒரு பெண் கொல்லப்பட்ட விஷயம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மக்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஈரானில் தற்போது மனித உரிமைகள் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் அங்கு யாரையும் நாடு கடத்துவது பொறுப்பற்ற செயலாக இருக்கும். எனவே நாடு கடத்துதலை தற்காலிகமாக நிறுத்துவது தான் மிகவும் சரியானதாக இருக்கும். மேலும் ஈரானில் உள்ள மகப் பொதுமக்களை பாதுகாப்பதற்கு ஜெர்மனியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமா அத்தனையும் ஜெர்மனி செய்யும்” என அவர் கூறியுள்ளார்.