டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6 வது இந்திய கைபேசி மாநாட்டில் அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட 5 ஆம் தலைமுறை என்கின்ற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜியோ நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், டிசம்பர் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் ஒவ்வொரு இந்தியரும் 5g சேவையை பெறுவார்கள் என்று ஜியோ உறுதி அளிக்கிறது. வருகின்ற தீபாவளி நாளுக்குள் நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் முழுமையான 5g சேவை அறிமுகப்படுத்தப்படும்.
ஆரம்பத்தில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய 4 மெட்ரோ நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்த உள்ளது. அதனைத் தொடர்ந்து 2023 டிசம்பருக்குள் நாடு முழுவதும் முழுமையான 5g சேவை பயன்பாட்டில் இருக்கும். இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க ஜியோ மொத்தம் ரூ.2 லட்ச கோடி முதலீடு செய்துள்ளது. இதனையடுத்து ஜியோ 5ஜி சேவை, உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் ஒவ்வொருவரையும் இணைக்கும். மேலும் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட சேவையாக இருக்கும் சீனா அமெரிக்காவை விட இந்தியாவில் தரவு சார்ந்த பொருளாதார நாடாக மாற்ற நாங்கள் உறுதி கொண்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.