சாலையில் விதிமுறைகளை மீறி இளம் பெண் ஒருவர் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கமாகி வருகிறது. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னார் பெங்களூரில் சொமாட்டோ டெலிவரியின் போது நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதில் பெண்ஒருவர் சொமாட்டோ டெலிவரி செய்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாக கூறி வலியும் ரத்தத்துடன் கடந்த வாரம் வீடியோ ஒன்றை வெளி ட்டார் . ஆனால் அந்த வீடியோஉண்மையில்லை என்று பின்னர்தான் தெரியவந்தது . .மேலும் இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது .
வட இந்தியாவில் வாலிபர் ஒருவர் தனது ktmduke பைக்கில் சென்று உள்ளார். அப்பொழுது ஒரு சிறிய சாலையில் இளம்பெண் ஒருவர் தன் வண்டியில் மொபைலில் பேசியவாறு எதிரே வரும் வாகனத்தை அலட்சியமாக எண்ணி சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிரே பைக்கில் வந்த வாலிபர் சுதாரித்துக் கொண்டு அவர் மீது மோதாமல் பைக்கை நிறுத்தி உள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் சாலை விதிகளை மதிக்காமல் மொபைலில் பேசிக் கொண்டு பைக்கில் இப்படி செல்லலாமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளார் .
அதற்கு உடனே அந்தப் பெண் பதில் ஏதும் சொல்லாமல் தன் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை போல அலட்சியமாக தன் விரலால் ஆபாசமான செய்கைகளை அந்த வாலிபரிடம் செய்து காட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தன் தவறை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை .ஆனால் இப்படி ஆபாசமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று புலம்பி உள்ளார். இருந்தாலும் அந்த பெண் தன் மீது எந்தத் தவறும் இல்லை என்ற எண்ணத்தில் தாறுமாறாக கத்தியுள்ளார். இதனை சாலையில் நின்று பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
இந்தசம்பவம் அனைத்தும் அந்த வாலிபரின் ஹெல்மெட்டில் உள்ள கேமராவில் பதிவு செய்து கொண்டே இருந்துள்ளது .ஆனால் அது அந்தப் பெண்ணிற்கு தெரியவில்லை .மேலும் அந்த வாலிபர் தன் மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டிதீர்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் .ஆனால் அந்த பெண் வாலிபரை விடாமல் துரத்தி சென்று பைக்கை நிறுத்த சொன்னார். .அந்த வாலிபரும் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தியுள்ளார். உடனே அந்தப் பெண் வாகனத்திலிருந்து இறங்கி வந்து வா போகலாம் காவல்நிலையத்திற்கு என்று அந்த வாலிபரிடம் கூறியுள்ளார். உடனே அந்த வாலிபரும் வாருங்கள் போகலாம் என்று கூறியுள்ளார.
மேலும் அந்த இளைஞர் இங்கு நடந்த அனைத்து சம்பவங்களும் எனது கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை காவல் நிலையத்தில் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். அப்போது யார் மீது தவறு என்று புரியும் என அந்த வாலிபர் கூறினார். அதற்குப்பின் அந்த பெண்ணுக்கு பயம்ஏற்பட்டது. அதனால் அந்தப்பெண் பின்வாங்கி சென்று விட்டார் . இந்த வீடியோவைஅந்த வாலிபர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.