நடுரோட்டில் பாலம் உடைப்பால் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சரிசெய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டலில் இருந்து நல்லியம்பாளையம செல்லும் சாலையில் நடுரோட்டில் பாலம் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் காணப்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்தை மண் போட்டு மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினத்தந்தி ஊடகங்களுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட பகுதியில் சிறுபாலத்தில் உள்ள கான்கிரீட்டில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் காணப்பட்டது. இதனால் மண் போட்டால் உடைப்பு சரி செய்ய முடியாது. ஆகவே அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.