உத்தரபிரதேசம் காசியாபாத் கவ்ஷம்பி நகரில் வசித்து வருபவர் விஷால் ஸ்ரீவஸ்தவா. இவருடைய மனைவிக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதனால் பிறந்தநாளை கொண்டாட விரும்பிய விஷால் தன் காரில் மனைவி மற்றும் அவரது பெண் தோழியை அழைத்துக்கொண்டு ராஜாநகர் சாலைக்கு சென்று உள்ளார்.
இதையடுத்து அங்கு நடுரோட்டில் காரை நிறுத்திய விஷால் தன் மனைவியுடன் சேர்ந்து கேக்வெட்டி கொண்டாடினார். அதன்பின் காரில் பாடல் போட்டு 3 பேரும் நடுரோட்டில் டான்ஸ் ஆடினர். இதற்கிடையில் மனைவியும், அவரது தோழியும் நடுரோட்டில் டான்ஸ் ஆடியதை விஷால் தன் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிய நிலையில் இது பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சாலை விதிகளை மீறி நடுரோட்டில் காரை நிறுத்தி கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் விஷாலை கைது செய்த காவல்துறையினர் அவருடைய காரை பறிமுதல் செய்தனர்.
#Ghaziabad में बीच सड़क पर 'आरएलडी आई रे…' गाने पर डांस कर रहे थे युवक-युवती, वीडियो सोशल मीडिया पर हुआ वायरल। वीडियो के संज्ञान में आने पर पुलिस ने दोनों को गिरफ्तार कर लिया है। #UttarPradesh #वायरल_यूपीतक pic.twitter.com/q7Bg49tJfd
— UP Tak (@UPTakOfficial) December 13, 2022