நடு ரோட்டில் லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த வல்லூர் அனல் மின் நிலையம் அருகில் உள்ள ஒரு பகுதியிலிருந்து லாரி ஒன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சூரப்பட்டு பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருவாரூர் பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதவரம் ரவுண்டானா அருகில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரியின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனையடுத்து காற்று பலமாக வீசியதால் லாரியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனை பார்த்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து மாதவரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் லாரியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாதவரம் காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.