Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நகைக்கடை அதிபரை தாக்கி 8 பவுன் கொள்ளை; சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்..!!

திருச்சி பாலக்கரை பகுதியில் நகை கடை அதிபரை தாக்கி 8 பவுன் தங்க நகை பறித்துச் சென்று 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை பாலக்கரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான ரவிச்சந்திரன். இவர் திருச்சி பாலக்கரை இடத்தில்  நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 21ஆம் தேதி இரவு நகை செய்யும் ஆசாரி வீட்டில் இருந்து 8 பவுன் நகைகளை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய ரவிச்சந்திரனை நோட்டமிட்ட ஒரு கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தின் பெட்டியில் இருந்த நகைகளை வெளியே எடுத்தான். திடீரென 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கீழே தள்ளி அவரிடம் இருந்து நகையை பறித்தனர். இதனை தடுக்க முயன்ற அவரை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி தலைமறைவானது. இந்த சம்பவம் குறித்து திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.

விசாரணை நடத்திய காவல்துறையினர் அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது தப்பி ஓடிய கும்பலிடமிருந்து ஒரு கைபேசி தவறிக் கீழே விழுந்துள்ளது. இதனையும் கைப்பற்றிய காவல்துறையினர், கைபேசியில் உள்ள எண்களை கொண்டும் அதில் உள்ள புகைப்படங்களை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஓயாமரி தாரநல்லூர் பகுதிகளில் கொள்ளை கும்பல் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டதும் செல்போனில் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கொள்ளையர்கள் தாரநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |