Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொள்ளை போன பல லட்சம் மதிப்புள்ள நகைகள்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நகை கடையை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் காவல்நிலையம் முன்பு தனியார் நகை கடையில் உள்ளது. இந்நிலையில் கடையில் வியாபாரம் முடிந்ததும் பணியாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து வழக்கம்போல் மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த பல லட்ச மதிப்பிலான நகைகள் திருடபட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |