பழ வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மன்னம்மாள் நகர் பகுதியில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முருகதாஸ் தனது மனைவியுடன் வழக்கம்போல் வெளியே வியாபாரத்துக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 சவரன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூ.30,000 திருட்டு போனது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து முருகதாஸ் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.