பூட்டிய வீட்டில் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் ராம நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள அவரது மகன், மகள் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவரது அண்ணன் ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சென்னையிலிருந்து விரைந்து வந்த ஜெயலட்சுமி வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 1\2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜெயலட்சுமி திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.