வீட்டின் பூட்டை உடைத்து 2 1\2 பவுன் நகை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் பொன்னுலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1\2 பவுன் கம்மல் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து மாரியம்மாள் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகையை திருடிச் சென்றது சேதுக்குவாய்த்தான் பகுதியில் வசிக்கும் சந்தியாமுகேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சந்தியாமுகேஷை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 2 1\2 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.