கோவில் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் நகரில் ராஜகணபதி கோவில் இருக்கின்றது. கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி இந்த கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 4 தங்க தாலிகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2 மாதங்களுக்குப் பிறகு இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.