திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கண்கவர் மெழுகு ஓவியங்களை தீட்டி வருகிறார்.
ஆலங்கையின் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் விஜயகுமார் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பள்ளி பருவத்தின் போது ஓவியத்தில் ஆர்வம் காட்டி பல்வேறு ஓவியங்களை வரைந்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கில் அவர் வீட்டில் உள்ள நிலையில் தற்போது பல்வேறு விதமான ஓவியங்கள் செய்வதற்கு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார். வித்தியாசமான முயற்சியாக மெழுகை கொண்டு ஓவியம் வரைந்துள்ளார். மெழுகை கொண்டு பல்வேறு வண்ணங்களில் சிவன், பார்வதி ராதாகிருஷ்ணன், வேதாத்திரி மகரிஷி, டிராகன் இயற்கை காட்சி என பல்வேறு ஓவியங்களை காண்போரை வியக்க வைக்கும் வகையில் ஓவியங்களை வரைந்து வருகிறார். இந்த ஓவியங்கள் காண்பவரின் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.