முதியவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திசையன்விளை புறவழி சாலையில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் பொன்னுசாமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பொன்னுசாமி திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.