Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பிறந்தநாள்…. கல்லறையில் இயக்குனர் மிஸ்கின் அஞ்சலி….!!

நேற்று நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் மிஸ்கின் அவரின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நேற்று பழம்பெரும் காமெடி நடிகரான சந்திரபாபுவின் பிறந்தநாள். ஆனால் அதைப்பற்றி பேசவோ, யோசிக்கவே யாருமில்லை. புகழின் உச்சியில் இருந்த சந்திரபாபு கடைசி காலத்தில் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடல் சாந்தோம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்ய முயன்றார். எம்.ஜி.ஆரை எதிர்த்து நின்றார். தன் கட்டிய மனைவியை முதலிரவிலேயே அவரின் காதலரோடு அனுப்பி வைத்தவர்.

முதல் மாடியில் கார் பார்க்கிங் வசதியுடன் வீடு கட்டியவர். நீச்சல் குளத்தை வீட்டிற்குள்ளே கட்டிய நடிகர், இறுதிகாலத்தில் மதுவுக்கு அடிமையாகி அனைத்தையும் இழந்தார். இவரின் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் சந்திரபாபுவின் பிறந்த நாளான நேற்று அவரது கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். சந்திரபாபுவின் காதல் கதையை திரைப்படமாகும் ஒரு யோசனை மிஷ்கினிடம் உள்ளது. அதை இப்படி தொடங்கியிருக்கலாம் என கூறுகிறார்கள்.

Categories

Tech |