Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

50 லட்சம் மதிப்புள்ள நகையா..? காணாமல் போன கல்லூரி மாணவி…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரியில் காணாமல் போன கல்லூரி மாணவி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இளந்தோப்பு விளையை சேர்ந்த துரைமணி கொத்தனாராக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்ரீ வித்யா அந்தப் பகுதியில் இருக்கும் பி.எட் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால் ஸ்ரீவித்யா வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீவித்யா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனது பெற்றோரிடம் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியில் புறப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஸ்ரீவித்யா வெகு நேரமாகியும் வராததால் பெற்றோர் வீட்டில் பார்த்தபோது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த சுமார் 50 லட்சம் மதிப்புள்ள நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஸ்ரீவித்யாவை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடி வந்துள்ளனர். ஆனால் ஸ்ரீவித்யா குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் மாணவியின் தந்தை துரைமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையுடன் சென்ற கல்லூரி மாணவி ஸ்ரீவித்யாவை யாரும் கடத்தி சென்றார்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |