நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு பகுதியில் தீபலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூம்பூரில் காவல்துறையினராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தீபலட்சுமி டி.ஐ.ஜி அலுவலகத்தில் பணி முடிந்து மொபட்டில் குடகனாறு பாலம் அருகே நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் தீபலட்சுமியை பின்தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றனர்.
இதனையடுத்து தீபலட்சுமி சுதாரிப்பாக தனது நகையை இறுக்கமாக பிடித்ததில் சங்கிலி இரண்டாக பிரிந்து அவர் கையில் 4 பவுனும் மர்ம நபர்கள் கையில் 1 பவுனும் சிக்கியது. அதன்பின் மர்மநபர்கள் அங்கிருந்து தயார்நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து தீபலட்சுமி தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.