Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகைகள்…. உரிமையாளர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ராஜாசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜாசிங் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து ராஜாசிங் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாசிங் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 1\2 பவுன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் திருட்டு போனது தெரிய வந்துள்ளது. மேலும் திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு 2 லட்சம் ஆகும். இதுகுறித்து ராஜாசிங் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |