Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கஜா புயலால் பாதித்த சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க கோரிக்கை விடுத்த நாகை பொதுமக்கள்…!!

கீழ்வேளூர் அருகில் கஜா புயலால் பழுதான சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க வேண்டி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

நாகப்பட்டினம்  கீழ்வேளூர் அடுத்துள்ள நாகை-தேவூர் சாலையோரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பாக சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு அமைந்ததன் மூலம் அந்த ஊராட்சி பகுதி மக்கள், லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சோலார் மின்கோபுரம் பழுதடைந்தில்  சோலார் மின்விளக்கு செயல்படாமல் காட்சி பொருளாக மாறி விட்டது.

புயல் ஏற்பட்டு 5 மாதத்திற்கு மேல் ஆகியும் இந்த சோலார் கோபுரத்தில் பேனல் அமைக்கப்பட்டு பழுது பார்க்கவில்லை. இதை தொடர்ந்து  அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது . மேலும் பட்டமங்கலம் ஊராட்சி பகுதியிலும் மின் தடை  அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சோலார் மின்விளக்கை சீரமைத்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Categories

Tech |