பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையர் உள்பட 13 ஊழியர்களுக்குக் கொரோனா உறுதியானதால் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெண் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் பிரிவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடலூரில் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சக ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். கடலூரில் மேலும் 109 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 521 ஆக உயர்ந்துள்ளது.