நகராட்சி அலுவலகத்தில் பொது மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதலியார்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் அவர்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருவதாகவும், அதுவும் குறைவான அளவே தண்ணீர் வருவதாலும் பொதுமக்கள் பலர் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் குடிநீர் பிரச்சினை குறித்து நகராட்சி ஆணையாளர் பெற்பெற்றி டெரன்ஸ் லியோனிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் அவர் முதலியார்பட்டி பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.