நாக சைதன்யா குடும்ப விருந்தில் சமந்தா கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா மற்றும் நாகசைதன்யா தென்னிந்தியாவின் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் ஆவர். சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருவதை நாம் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் சில விஷயங்களும் நடந்து வருகிறது.
அதன் படி நாகசைதன்யா நடித்த லவ் ஸ்டோரி படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது நடிகர் அமீர்கானுக்கு நாகார்ஜுனாவின் குடும்பம் ஹைதராபாத்தில் ஒரு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விருந்தில் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா, நாக சைதன்யா, அகில் மற்றும் லவ் ஸ்டோரி பட இயக்குனர் சேகர் கம்முலா, சாய் பல்லவி ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர். ஆனால் நடிகை சமந்தா இந்த விருந்தில் கலந்துகொள்ளவில்லை.