Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி தவிக்கும் மக்கள் ….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி தவிக்கும் மக்கள் சாலை வசதி செய்துதர கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, அழகு கூட்டமாவிலை, காட்டுவிலை உட்பட ஏழு கிராமங்களில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வரக் கூட வழி இல்லாததால் பலர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகம் அங்கிருந்த ஒத்தையடி பாதையிலும் மரக்கன்றுகளை நட்டு பாதையை இல்லாமல் செய்துள்ளது. இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ள மக்கள் உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |