தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் .இந்நிலையில் இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘நாய் சேகர்’ படத்தை இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில் குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார் .இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் அணியின்நட்சத்திரவீரர் அஸ்வின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்டனர்.
இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சதீஷ் நடித்துள்ள ‘நாய் சேகர்’ படத்தின் டீசர் வெளியானது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் டீசரில் இடம்பெற்றிருக்கும் டைமிங் காமெடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லப்பிராணி நாய்க்கு நடிகர் மிர்ச்சி சிவா குரல் கொடுத்துள்ளார். இத்தகவலை நடித்த சதீஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .அதோடு மிர்ச்சி சிவாவுக்கு நன்றி தெரிவித்து புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thank you @actorshiva for being the voice behind the pet in #NaaiSekar 😍🤗
▶️ https://t.co/GirZkCUyZh#NaaiSekarTeaser @Ags_production @agscinemas @archanakalpathi @aishkalpathi @itspavitralaksh @KishoreRajkumar @anirudhofficial @venkat_manickam @iamSandy_Off @SonyMusicSouth pic.twitter.com/XySQ9adC3Y
— Sathish (@actorsathish) January 2, 2022