‘நாய் சேகர்’ படத்தின் தன் பகுதி படப்பிடிப்பை பவித்ரா லட்சுமி நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ”நாய் சேகர்”. கிஷோர் ராஜ் குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பவித்ரா லட்சுமி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த படத்தின் தன் பகுதி படப்பிடிப்பை பவித்ரா லட்சுமி நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில், இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.